இன்று அஜித்தின் 43ஆவது பிறந்த நாள்!

இன்று அஜித்தின் 43ஆவது பிறந்த நாள்!

இன்று அஜித்தின் 43ஆவது பிறந்த நாள்!

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 12:13 pm

மே1 இன்று தொழிலாளர் தினம் மட்டுமின்றி அஜித்தின் பிறந்த நாளும் கூட.

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறியவர்தான் அஜித். வெற்றியோ தோல்வியோ இரண்டையும் கையாளும் பக்குவம் இவரிடம் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து போராடும் குணம் உடைய இவரை, பொதுவாகவே தன்னம்பிக்கையின் சிகரம் என்பார்கள்.

Ajith
எதற்காகவும் யாருக்காகவும் தனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டார். சினிமா மட்டுமன்றி பைக், மோட்டார் கார் ரேஸ்கள், போட்டோகிராபி என பல துறைகளில் ஆர்வமிக்கவர் அஜித். ‘அமராவதி’ திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வரை பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அஜித் நடிக்க வந்து கிட்டதட்ட இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை அவர் 54 படங்கள் நடித்துவிட்டார். தற்போது அஜித்தின் 55 ஆவது படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்நிலையில் இன்று அஜித் தனது 43 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைபிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்