பறவைகளின் வருகையால் சரணாலயமாக மாறியுள்ள முந்தல்! (வீடியோ)

பறவைகளின் வருகையால் சரணாலயமாக மாறியுள்ள முந்தல்! (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

30 Apr, 2014 | 9:48 pm

மானுடர்களின் ரசனையில் தனி இடம்பிடித்து, கலைஞர்களையும் கவிஞர்களையும் உருவாக்குவது இயற்கையே.

பாமரன் முதல் கவிஞன் வரை தம்மை மறந்து ரசிக்கும் இயற்கைக்கு மேலும் அழகு சேர்க்கும் முகமாக பறவை இனங்கள் காணப்படுகின்றன.

வேடந்தாங்கல் பறவைகளின் வருகையால் சரணாலயம் போன்று காட்சியளிக்கின்றது புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசம்.

அப்பிரதேசக் குளங்களின் தற்போதைய ஆட்சியாளர்கள் பறவைகள்தான்.

புத்தளத்தில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக அங்குள்ள குளங்கள் நாளுக்கு நாள் வற்றி வருகின்றன.

இதனால், குளங்களிலுள்ள மீன்கள் வௌித்தெரிய ஆரம்பித்துள்ளமையே பறவைகளின், இப்பகுதி நோக்கிய படையெடுப்பிற்கு பிரதான காரணம்.

இயற்கையின் படைப்புக்கள் நிகரற்றவை என்பதற்கு இந்த வேடந்தாங்கல் பறவைகளின் அழகும் ஒரு சான்று!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்