3 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்ட மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி

3 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்ட மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி

3 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்ட மறக்க முடியாத கிரிக்கெட் போட்டி

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 5:13 pm

இங்கிலாந்தில் நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஒரு அணி 3 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

வைரல் கிரிக்கெட் கழகத்திற்கும் (Wirral Cricket Club) ஹஸ்லிங்டன்  கழகத்திற்கும் (Haslington) இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.

Wirral-cc-score-card

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹஸ்லிங்டன் கழக அணி 108 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வைரல் கழகம் 3 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணி சார்பாக 10 வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழக்க, ஒரு வீரர் மாத்திரம் 1 ஓட்டத்தினைப் பெற்றார். உதிரிகளாக 2 ஓட்டங்கள் கிடைத்தன.

all-out-for-3

ஹஸ்லிங்டன் கழகம் சார்பாக பென் ஸ்டட் 1 ஓட்டத்திற்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்