26 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள் கொள்ளை; காரில் வந்த குழு கைவரிசை

26 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள் கொள்ளை; காரில் வந்த குழு கைவரிசை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 7:42 pm

மாவனெல்லை, பஹல கடுகண்ணாவ பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் இருந்த 26 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் இன்று மதியம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் கொள்வனவு செய்யும் போர்வையில் வருகைதந்த குழுவொன்று, வர்த்தகருக்குச் சொந்தமான ஹோட்டலொன்றில் இருந்த இரத்தினக்கற்களை  கொள்ளையிட்டு, காரொன்றில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

காரொன்றில் கொள்ளையர்கள் மூவரும் வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வர்த்தகரிடம் இருந்த 09 இரத்தினக்கற்கள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன.

இரத்தினக் கற்களை கொள்ளையிட்டவர்களை கைதுசெய்வதற்கு 06 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்