வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட மூவர் கைது

வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட மூவர் கைது

வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 8:21 pm

அத்துறுகிரிய, மொறட்டுவ, கொஹூவல மற்றும் கிருலப்பனை பகுதிகளில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைகளுடன் தொடர்புடைய 03 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து, கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் இவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

எனினும், கிருலப்பனையில் உள்ள தனியார் வங்கியொன்றை அண்மையில் கொள்ளையிடுவதற்கு இவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்கடிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்