யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான, மீன்பிடியியல் டிப்ளோமாதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான, மீன்பிடியியல் டிப்ளோமாதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான, மீன்பிடியியல் டிப்ளோமாதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 8:39 pm

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் மீன்பிடியியல் டிப்ளோமாதாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி, விஞ்ஞான மற்றும் மீன்பிடியியல் டிப்ளோமாதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண சபை கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது யாழ். பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மாகாண முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்ததாக பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்