மத குழுக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை கையாள பொலிஸ் பிரிவு

மத குழுக்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை கையாள பொலிஸ் பிரிவு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 9:25 pm

மத குழுக்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பிலான  முறைப்பாடுகளை கையாள்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் பிரிவு புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மதக் குழுக்களினால் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் இந்த விசேட பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்ககோன் கூறியுள்ளார்.

தொலைபேசி ஊடாக அல்லது தொலைநகல் மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத விவகாரங்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்