மது அருந்திய இருவர் உயிரிழப்பு; மரணத்திற்கான காரணம் வெளியானது

மது அருந்திய இருவர் உயிரிழப்பு; மரணத்திற்கான காரணம் வெளியானது

மது அருந்திய இருவர் உயிரிழப்பு; மரணத்திற்கான காரணம் வெளியானது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 11:10 am

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருவகை மதுபானம் விஷமடைந்தமை, மீரிகம – பள்ளேவெல பகுதியில் இருவர் உயிரிழந்தமைக்கு காரணமாக  இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய மதுபானத்தின் மாதிரியை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக  பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அத்தனகல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது

மதுபானம் அருந்திய நிலையில் சுகயீனமுற்று வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும், இரண்டு பொலிஸ் அதிகாரிகளில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றையவர் குணமடைந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மீரிகம – பள்ளேவெல பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது மதுபானம் அருந்திய   இருவர் உயிரிழந்தனர்.

அத்துடன் மேலும் இருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்