பொலிவுட்டில் விருது பெற்றார் தனுஷ்

பொலிவுட்டில் விருது பெற்றார் தனுஷ்

பொலிவுட்டில் விருது பெற்றார் தனுஷ்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 8:56 am

கொலவெறி பாடல் வெற்றிக்கு பிறகு 2013யில் தனுஷ் ராஞ்சனா என்ற படம் மூலம் பொலிவுட்டில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பொலிவுட்டில் மிகப் பெரிய விருது நிகழ்ச்சியான IIFA 2014 ஆண்டு விழாவில் தனுஷ்ஷுக்கு அறிமுக நாயகன் என்ற விருது கிடைத்துள்ளது.

Dhanush-speaks-after-winning-the-Best-Debut-Male-Award-for-Raanjhanaa-at-the-59th-Idea-Filmfare-Awards-2013-held-at-the-Yash-Raj-Studios-in-Mumbai-on-January-24-2014-

இது பற்றி தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், என்னுடைய முதல் IIFA விருது, இந்த விருது கிடைக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றி, உங்களின் உதவி இல்லாமல் நான் இந்த விருதினை பெற முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தனுஷ் பொலிவுட்டில் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷாரா ஹாசனுடன் இரண்டாவது படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

big-b_storysize_650-2_041414030036

தமிழிலும் வேலை இல்லா பட்டதாரி, அனேகன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்