பண்டாரவளை பஸ் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

பண்டாரவளை பஸ் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 7:38 pm

பதுளை – பண்டாரவளை வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்சொன்று, வீதியைவிட்டு விலகி, இன்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையிலும், பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பஸ்சின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்