நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; 33ஆவது நாள் இன்று

நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; 33ஆவது நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 7:33 pm

சர்வதேச இளைஞர் மாநாட்டிற்கு முன்னோடியாக நியூஸ்பெஸ்ட் மற்றும் ஸ்ரீ லங்கா யூத் இணைந்து ஏற்பாடு செய்துள்ள AROUND THE WORLD IN 40 DAYS உலக சுற்றுப் பயணத்தின் 33 ஆம் நாள் இன்றாகும்.

உலக சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள குழாத்தினர் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகரை சென்றடைந்துள்ளனர்.

பிரான்ஸுக்கான விஜயத்தை நிறைவுசெய்ததன் பின்னரே, இந்தக் குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.

பிரான்ஸூக்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில்  கலந்துகொண்ட இந்தக் குழுவினர், அந்நாட்டு இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்துகொள்ளவுள்ளதாக  உலக சுற்றுப் பயணத்தில் இணைந்துள்ள நியூஸ்பெஸ்ட்டின் பொது முகாமையாலர் யசரத் கமல்சிறி தெரிவித்தார்.

40  நாட்களை கொண்ட உலக சுற்றுப் பயணம் எதிர்வரும் 05 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ளது.

சர்வதேச இளைஞர் மாநாடு இன்னும் 08 நாட்களில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்