நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன் – ஹன்சிகா

நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன் – ஹன்சிகா

நான் சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன் – ஹன்சிகா

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 6:10 pm

இப்போது சினிமா வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன் என்று நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார்.

தமிழில் ‘அரண்மனை’, ‘மீகாமன்’, ‘ரோமியோ ஜுலியட்’, ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என வரிசையாக படங்களை நடித்து வருகிறார் ஹன்சிகா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு – ஹன்சிகா பிரிந்த செய்தியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஹன்சிகா காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் மறுத்திருக்கிறார்.

இது குறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில், ” நான் மீண்டும் காதலிப்பதாக முன்னணி வார இதழில் கவர்ச்சிகரமான தலைப்பிட்டிருந்தார்கள். நான் இப்போதைக்கு எனது வேலையை மட்டுமே காதலித்து வருகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

ஹன்சிகா ட்விட்டரில் தெரிவித்த கருத்து

Currently I’m only in love with my work 🙂 .
Just read that “I’m in love again ! According to a leading Tamil magazine ! Really?? am I ??? Haha ! “Nice fake captions”(cont)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்