தங்கம் கடத்திய இலங்கைப் பெண்கள் பெங்களூரில் கைது

தங்கம் கடத்திய இலங்கைப் பெண்கள் பெங்களூரில் கைது

தங்கம் கடத்திய இலங்கைப் பெண்கள் பெங்களூரில் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 1:17 pm

தங்கம் கடத்திய மூன்று இலங்கைப் பெண்கள் தென் இந்தியவின் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு கிலோ 160 கிராமுக்கும் மேற்பட்ட  தங்கம் கைப்பற்றப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

தமது காலணிகளில் இருந்து ஏதேனும் பொருளை எடுத்து பயணப்பொதிக்குள் வைப்பதனை பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்ததை அடுத்து, இந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்