ஜனாதிபதி இன்று பஹ்ரெயின் பயணம்

ஜனாதிபதி இன்று பஹ்ரெயின் பயணம்

ஜனாதிபதி இன்று பஹ்ரெயின் பயணம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 1:35 pm

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை பஹ்ரெயினுக்கு சென்றுள்ளார்.

பஹ்ரெயின் மன்னரை சந்தித்து ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து இரு தரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் பஹ்ரெயின் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.

பஹ்ரெயினின் வர்த்தக சமூகம் மற்றும் அந்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்