சிவனொளிபாத மலைக்குச் சென்ற யாத்திரிகர்கள் தவறிவிழுந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

சிவனொளிபாத மலைக்குச் சென்ற யாத்திரிகர்கள் தவறிவிழுந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

சிவனொளிபாத மலைக்குச் சென்ற யாத்திரிகர்கள் தவறிவிழுந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 1:48 pm

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த நால்வர் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த 82 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்

காயமடைந்த பெண் ஒருவர் டிக்கோயா கிளங்கன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரும் மஸ்கெலியா வைத்தியசாலையிலும், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்