சவுதியில் மேர்ஸ் வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

சவுதியில் மேர்ஸ் வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

சவுதியில் மேர்ஸ் வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 9:38 am

சவுதி அரேபியாவில் மேர்ஸ் என்ற உயிர்கொல்லி வைரஸ்சினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் பரவிவரும் இந்த வைரஸ்சினால் பீடிக்கப்பட்ட 8 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வைரஸ்சினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென  தலைநகர் ரியாத் ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் நிபுணத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல்> நிமோனியா மற்றும் சீறுநீரக செயலிழப்பு என்பன இந்த வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாகும் என சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் பரவும் வீதம் அதிகரித்துள்ளதுடன் வைரஸ்சினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள உதவி வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில்  இந்த வைரஸ்சினால் பீடிக்கப்பட்ட மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்