கோட்டே நகர சபையின் தலைவருக்கு பிடியாணை

கோட்டே நகர சபையின் தலைவருக்கு பிடியாணை

கோட்டே நகர சபையின் தலைவருக்கு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 2:01 pm

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய கோட்டே நகர சபையின் தலைவர் ஜனக ரணவக்க உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டே நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள அரச காணியொன்றை சட்டவிரோதமாக வேறொருவரிடம் கையளித்தமை மற்றும் அதனூடாக அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை இடம்பெற்றபோது நகர சபைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்காதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்களில்  நகர சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததால்  பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்