கொழும்பு மாநகரின் கழிவு வெளியேற்றம் தொடர்பில் வரி

கொழும்பு மாநகரின் கழிவு வெளியேற்றம் தொடர்பில் வரி

கொழும்பு மாநகரின் கழிவு வெளியேற்றம் தொடர்பில் வரி

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 2:24 pm

கொழும்பு மாநகரின் கழிவு வெளியேற்றம் தொடர்பில் வரி அறவிடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகரின் கழிவு வெளியேற்றும் கட்டமைப்பு சுமார் 100 வருடங்கள் பழமையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை புனரமைப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்