கொலைக் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 5:49 pm

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட 07 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நில்தண்டாஹின்ன பகுதியில் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் 07 குற்றவாளிகளுக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியற்குழுக்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தில் 09 எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், இருவர் வழக்கு விசாரணைகளின் போது, உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து சகோதரர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்