குஜராத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் கைது

குஜராத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் கைது

குஜராத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 2:58 pm

இந்திய மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலத்திற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

அசாம்பாவிதங்கள்  இடம்பெறுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இந்தியத் தவல்கள் குறிப்பிடுகின்றன.

இவர்களில் 19 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் எனவும் ஏனையவர்கள் குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ளவர்கள் எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் நான்கு இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் மாநிலத்தில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில் குஜராத் மாநில தேர்தல் ஆணையகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளில்  நாளை மறுதினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்