கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 7:54 am

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூளை வளாகத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி  நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என பல்கலைகழக உபவேந்தர் கிட்ணர் கோபிந்தராஜா தெரிவித்தார்.

விசேட கற்கை நெறியில் கல்வி பயிலும் கலை மற்றும் விஞ்ஞான பிரிவின் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கால்வி  கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்களிடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலை அடுத்து ,பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் காலவரையரையின்றி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்