எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை பரிந்துரை

எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை பரிந்துரை

எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 5:54 pm

எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆதரவாளர்கள் 683 பேருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ஏனைய 37 பேருக்கு மரண தண்டனை விதிப்பதை தாமதப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரி மொஹமட் பெய்டிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரியுள்ளமை எகிப்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு முஸ்லிம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்த மொஹமட் மூர்சி பதவி கவிழக்கப்பட்ட பின்னர் எகிப்தில் ஸ்திரமன்ற நிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்