உண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு.!

உண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு.!

உண்ணக்கூடிய நீர் போத்தல் கண்டுபிடிப்பு.!

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 11:27 am

போத்தலில் அடைக்கப்பட்ட நீரை குடித்து முடித்த பின்னர் அந்த போத்தலை உண்ணக்கூடிய வகையிலான போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள மாணவன் ஒருவரால் கண்டுபிடிக்கபட்பட்டுள்ள இந்த உண்ணக்கூடிய நீர் போத்தல் உலகில் பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் ஒரு முயற்சியாக உருவாக்கபட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்நத பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட ஆராய்சிகளின் பலனாக இந்த உண்ணக்கூடிய போத்தலை கோன்சலஸ் என்ற மாணவன் கண்டுபிடித்துள்ளார்.

இந்த போத்தலை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக ஜெலிஃபிஷ் உள்ளிட்ட உண்ணக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. .

கோன்சலஸ் மற்றும் அவரது குழுவினர் முதலில் உறைந்த நீர் பந்தை எடுத்து கால்சியம் குளோரைடுக்குள் அமிழ்த்தி ஒரு வழவழப்பான மேற்புற அடுக்கை தோற்றுவித்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த உறைந்த தண்ணீர் பந்தை வலுப்படுத்த பழுப்பு பாசிகள் சாறு அடங்கிய திரவத்தினுள் அது மீண்டும் அமிழ்த்தப்பட்டுள்ளது.

குறித்த திரவத்தினுள் பந்து நீண்ட நேரம் வைக்க்ப்படும் போது அதன் மேற்புறம் வலுவானதாக மாற்றமடைகிறது.

இந்த உண்ணக்கூடிய நீர்போத்தல் ஆராய்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் வர்த்த்தக துறையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றீடாக பயன்படுத்த இது குறித்து மேலும் ஆ்ய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இதனை கண்டுபிடித்த மாணவனான கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்