இருபதுக்கு-20 உலகக் கிண்ண வெற்றி; அனுபவங்களை பகிரும் சங்கக்கார (Exclusive Interview)

இருபதுக்கு-20 உலகக் கிண்ண வெற்றி; அனுபவங்களை பகிரும் சங்கக்கார (Exclusive Interview)

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 4:49 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார எஸ் எப்.எம் வானொலிக்கு (YES FM )  விசேட செவ்வியொன்றினை வழங்கியிருந்தார்.

இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்டுடியோவில் இடம்பெற்ற இந்த நேர்காணல் நேற்று இரவு எம்.ரீ.வி ஸ்போர்ட்ஸ் (MTV Sports) அலைவரிசையிலும் ஒளிபரப்பானது.

குமார் சங்கக்காரவின் மனைவியும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி, அணி வீரர்களுடனான  அனுபவங்கள் உள்ளிட்ட பல விடயங்களை சங்கக்கார பகிர்ந்து கொண்டார்.

இந்த நேர்காணலில் இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸல் ஆர்னல்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி ஆகியோர் தொலைபேசி மூலமாக தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த நேர்காணலில் சங்கக்கார தனது மனைவி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சில விடயங்களையும் பகிர்ந்துகொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
con[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்