ஆற்றில் வீசப்பட்ட இரு சிறார்களை தாயிடம் ஒப்படைக்க உத்தரவு

ஆற்றில் வீசப்பட்ட இரு சிறார்களை தாயிடம் ஒப்படைக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2014 | 8:27 pm

தந்தையினால் மாத்தறை மஹானாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கைக்குள் வீசப்பட்ட சிறுவர்கள் இருவரையும், அவர்களின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு மாத்தறை மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மாத்தறை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் இருவரும் தற்போது நன்னடத்தைப் பிரிவினரின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர்.

இரண்டு மற்றும் 04 வயதான சிறார்கள் இருவர், இரண்டு இலட்சம் ரூபா பிணையில் அவர்களின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக, சிறார்கள் இருவரும் தமது தந்தையினால் கடந்த 24 ஆம் திகதி நில்வலா கங்கைக்குள் வீசப்பட்ட சந்தர்ப்பத்தில், அருகில் இருந்த இராணுவ உறுப்பினர்களால் காப்பாற்றப்பட்டனர்.

சந்தேகநபரான தந்தையை கைதுசெய்வதற்கு பிரதேச ரீதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், நில்வலா கங்கையில் மிதந்துகொண்டிருந்த அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்