முன்னாள் பாப்பரசர்கள் இருவருக்கு புனிதர் பட்டம்

முன்னாள் பாப்பரசர்கள் இருவருக்கு புனிதர் பட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2014 | 2:00 pm

முன்னாள் பாப்பரசர்களான 23ஆவது  ஜோன் மற்றும்  2 ஆவது ஜோன்பால் ஆகியோருக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மற்றும் முன்னாள் பாப்ரசரான பெனடிக்ட் ஆகியோரின் தலைமையில் இன்று வத்திக்கானில் நடைபெறவுள்ள விசேட திருப்பலியின் போது இந்த பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கான பக்தர்களும் வெளிநாட்டு ஆயர்கள் திருப்பலியில் பங்குகொண்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டு பாப்பரசர்கள் ஒரே தடவையில் புனிதர் பட்டம் வழங்கப்படுகின்றமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியைச் சேர்ந்த பாப்பரசர்  23ஆவது ஜோன் 1958 முதல் 1963 ஆம் ஆண்டுகளில் பாப்பரசராக பதவி வகித்ததுடன் ,   1935  ஆம் ஆண்டில்  ஹிட்லரின் நாஜி படைகளிடம் இருந்து   ஆயிரக்கணக்கான யூதர்களையும், ஹங்கேரி நாட்டு யூதர்களையும் காப்பாற்ற உதவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

போலந்தைச் சேர்ந்த பாப்பரசர்  2 ஆவது ஜோன்போல் , 1978 முதல் 2005ஆம் ஆண்டு வரை பதவி வகித்ததுடன், இறையியல் பணியாளர்களின் புலனடக்கம், மதத்துக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு கத்தோலிக்கர்கள் பணியாற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்