யாழில் பொலிஸ் சேவைக்கு தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

யாழில் பொலிஸ் சேவைக்கு தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

யாழில் பொலிஸ் சேவைக்கு தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2014 | 2:49 pm

யாழ். மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு 600 தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடலாவிய ரீதியில் பொலிஸ் சேவைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக யாழ். மாவட்டத்திலும்  பெண்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் மாவட்டத்திற்கு தேவையான 500 பெண் பொலிஸ் கான்ஸ்ரபிள்களையும் 100 பெண் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களையும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் மாவட்டத்திலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கனவே வட மாகாணத்தில் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவும்   வெற்றிடங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்