கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2014 | 7:54 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 37ஆவது வருடாந்த வளர்ச்சி மீளாய்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு இரத்மலானை – ஸ்டையின் கலையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 2013 – 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக YES FM அலைவரிசை  பிரதானியான Shaq என்றழைக்கப்படும் ரியாஸ்டின் சாஜஹான் தெரிவு செய்யப்பட்டார்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவருக்கான தங்கப் பதக்கத்தையும் விருதினையும் வழங்கி வைத்தார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் வருடாந்த வளர்ச்சி மீளாய்வு நிகழ்வின்போது இசையுடன் இணைந்த கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த கலைஞர்கள் நிகழ்த்தியிருந்தமை விசேட அம்சமாகும்.

இதன்போது வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மற்றும் குழுமப் பணிப்பாளரான சசி ராஜமகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உரை நிகழ்த்தினார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் 2013 – 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்யும் பொருட்டு  ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

ஸ்டையின் கலையகத்தின் தயாரிப்புப் பணிப்பாளர் அஜித் வீரசூரிய, ரூமர்ஸ் சலூன் முகாமையாளர் கொனேல் பெக்மயிர் (Cornell Beckmire), குழுமப் பணிப்பாளர் நாலக்க செனவிரத்ன, ஐ.சி.எல். நிறுவனத்தின் துறைசார் விநியோக முகாமையாளர் வாஸ் குணவர்தன மற்றும் YES FM அலைவரிசை பிரதானியான ரியாஸ்டின் சாஜஹன் என்றழைக்கப்படும் Shaq ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நிறைவேற்று அதிகாரிகளும் சட்டண அரசியல் விவாதம் இடம்பெறுகின்ற மேடைக்கு நேற்றைய தினம்  அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விவாதம் நிறைவுற்ற சந்தர்ப்பத்தில் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியின் பெயரை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியது.

இதன்போது YES FM அலைவரிசை பிரதானியான Shaq 2013 / 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரிக்கான விருதினை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்