யுக்ரைனில் நிலைகொண்டுள்ள சட்டவிரோத படையினரை வெளியேற்ற ரஷ்யா இணக்கம்

யுக்ரைனில் நிலைகொண்டுள்ள சட்டவிரோத படையினரை வெளியேற்ற ரஷ்யா இணக்கம்

யுக்ரைனில் நிலைகொண்டுள்ள சட்டவிரோத படையினரை வெளியேற்ற ரஷ்யா இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 5:02 pm

யுக்ரைனில் நிலை கொண்டுள்ள சட்டவிரோத கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக யுக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்களினால்  யுக்ரைனின் அரசாங்க கட்டடங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து அங்குள்ள எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத கிளர்ச்சியாளர்களும் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் ஒன்று கூடிய ரஷ்ய யுக்ரைன்   ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர்கள் யுக்ரேன் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படையினரை வெளியேற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து்ள்ளனர்.

இதனை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை  துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்