மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்குவதாக நரேந்திர மோடி தெரிவிப்பு

மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்குவதாக நரேந்திர மோடி தெரிவிப்பு

மீனவர் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்குவதாக நரேந்திர மோடி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 9:33 am

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் மோடி இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களை பாதுகாப்பதற்கு பலவீனமான தற்போதைய மத்திய அரசு தவறியுள்ளதாகவும் அவர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுவதாகவும், கேரள கடற்பரப்பில் இத்தாலி கடற்படையினரால் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயினும், இந்த நடவடிக்கைகளை தடுத்து   நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களில் தாம் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்