பொலன்னறுவையில் பாரிய விபத்து; 9 பேர் பலி

பொலன்னறுவையில் பாரிய விபத்து; 9 பேர் பலி

பொலன்னறுவையில் பாரிய விபத்து; 9 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 2:34 pm

அரலகங்வில அளுத்ஒயா பகுதியிலுள்ள  இசெட் ஈ வாய்க்காலுக்குள்  சிறிய ரக உழவு இயந்திரமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பகல் 12.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடன் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் காப்பாற்றப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தெஹியத்தகண்டிய, நிக்கவத்த, லந்த பகுதியிலிருந்து அரலகங்வில செவனபிட்டிய பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்