நீர்கொழும்பில் நகைக்கடை கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்களை கைதுசெய்ய 3  பொலிஸ் குழுக்கள்

நீர்கொழும்பில் நகைக்கடை கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ் குழுக்கள்

நீர்கொழும்பில் நகைக்கடை கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ் குழுக்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 9:46 am

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் சுமார் 30 இலட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை நேற்றிரவு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரடங்கிய குழுவினர், தலைக்கவசத்துடன், நகைக் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்