நாட்டில் வருடாந்தம் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் வருடாந்தம் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் வருடாந்தம் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 3:10 pm

நாட்டில் வருடாந்தம் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வருடாந்தம் மனிதர்களின் செயற்பாடு காரணமாக, சுமார் 250 யானைகள் உயிரிழப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச் டீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆயினும், கடந்த வருடம் இந்த எண்ணிக்கையை 208 ஆக கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் கூறினார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளினால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யானைகளை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு முக்கியமானது என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்