தென்கொரிய கப்பல் விபத்து; கப்பலின் கெப்டனை கைது செய்யுமாறு கோரிக்கை

தென்கொரிய கப்பல் விபத்து; கப்பலின் கெப்டனை கைது செய்யுமாறு கோரிக்கை

தென்கொரிய கப்பல் விபத்து; கப்பலின் கெப்டனை கைது செய்யுமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 7:56 pm

தென்கொரிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளனான கப்பலின் கெப்டனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு தென்கொரிய நீதிமன்றத்தில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய கப்பலின் கெப்டன் மற்றும் மூன்று பணியாளர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சட்டத்தரணிகளும் பொலிஸாரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

விபத்துக்குள்ளான தென்கொரிய கப்பலின் கெப்டன் லீ ஜோன் சியோக் தொலைக்காட்சியில் தோன்றி பாதிக்கப்பட்டவர்களிடமும்  அவர்களின் உறவினர்களிடமும் மன்னிப்பு கோரயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பல் விபத்துக்குள்ளான போது   மூன்றாம் நிலை கெப்டனே   கப்பலை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கெப்டன் மற்றும்  இரண்டாம் நிலைக் கெப்டன் ஆகியோர்  கப்பலில் இருந்த போதும் கப்பல் மூழ்கும் சந்தர்ப்பத்திலும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை  என  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கப்பல் மூழ்கியதால் காணாமற்போன 268 பேரை தேடும் நடவடிக்கை கடல் சீற்றம் காரணமாக மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கப்பலில் பயணித்த பயணிகளில் 179 பேர் காப்பற்றப்பட்டதாகவும்  28 உயிரிழந்ததாகவும் வட கொரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்