சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 9:21 am

15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தச் சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

மாலம்பே பகுதியில் தனது தாயாரினால் இந்தச் சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தனது சிறிய தாயாரிடம் சிறுமி தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்