சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஐ,நா பொதுச் சபைத் தலைவர் அறிவிப்பு

சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஐ,நா பொதுச் சபைத் தலைவர் அறிவிப்பு

சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதாக ஐ,நா பொதுச் சபைத் தலைவர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 7:31 pm

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் தாம் பங்குபற்றவுள்ளமையை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர் கலாநிதி வில்லியம் ஏஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐ.நா பொதுச் சபைத் தலைவருடன் ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி அஹ்மட் அல் ஹொண்டோவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச இளைஞர் மாநாடு மே மாதம் ஆறாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவம் ஹம்பாந்தோட்டை ருஹுனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறை சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்