கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 4:23 pm

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி. சிவசுப்பிரமணியம் முன்னிலையில் சந்தேகநபர் இன்று காலை  ஆஜர்படுத்தப்பட்டபோது,  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த 28 வயதான யுவதி ஒருவர் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி புன்னை நீராவி பகுதி கிணற்றில் இருந்து, கழுத்தில் வெட்டுக் காயங்களோடு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவர் சந்தேகநபருடன் கொண்டிருந்த காதல் தொடர்பினால் கர்ப்பமுற்றிருந்தார் எனவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தும் நோக்கில் கிளிநொச்சி சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்திருந்தது.

அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புப் படை முகாமில் கடமையாற்றிய வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார்  கைதுசெய்ததுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்