கல்வி திட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

கல்வி திட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

கல்வி திட்டத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 10:04 am

கல்வி தொடர்பான அரச கொள்கைத் திட்டத்தில் புதிய ஆலோசனைகளை இணைக்கும் நோக்கில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி தொடர்பான அரச கொள்கைத் திட்டம் 2003 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதென தேசிய கல்வி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இந்த கொள்கைகள் தற்போதைய நடைமுறைக்கு பொருத்தமாக அமைந்துள்ளதா என்பது தொடர்பில்  கண்டறியும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கல்வி, உயர் கல்வி, பட்டப்  பின்படிப்பு ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

அதன் பிரகாரம் எந்தவொரு நபருக்கும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு நேரில் வருகைதந்து அல்லது கடிதம் மூலம் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்வி தொடர்பான அரச கொள்கைத் திட்டம் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட தீர்மானங்கள் குறித்து எதிர்காலத்தில் ஜனாதிபதியிடம் கலந்தாலோசிக்க உள்ளதாக தேசிய கல்வி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்