ஐ.தே.க உறுப்பினர்கள் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்

ஐ.தே.க உறுப்பினர்கள் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்

ஐ.தே.க உறுப்பினர்கள் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 3:25 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்றின் மீது மத்தல விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், மூன்று பிரிவுகளின் கீழ், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரால் பொலிஸ் தலைமையகத்தில் தாக்கல்செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பாதுகாப்புத் தரப்பினர், தமது கடமையினை உரியமுறையில் நிறைவேற்றினார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்