இலங்கைக்கு எதிராக அடைந்த தோல்வி இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது – யுவராஜ் (காணொளி இணைப்பு)

இலங்கைக்கு எதிராக அடைந்த தோல்வி இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது – யுவராஜ் (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2014 | 11:25 am

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் 2 ஆவது போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சரியான நேரத்தில் யுவராஜ் சிங் 29 பந்துகளில் ஐந்து இமாலய சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன் மூலம் ரூ. 14 கோடி ரூபாய்க்கு தன்னை ஏலத்தில் எடுத்தது சரியென நிரூபித்ததோடு, இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் தடுமாறியபோது எழுந்த விமர்சனத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

7ஆவது ஐ.பி.எல் போட்டியின் 2ஆவது போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. காயம் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பீட்டர்சன் பங்கேற்கவில்லை. தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல பெங்களூர் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதுகு வலி காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. அவுஸ்திரேலியாவைத் சேர்ந்த நிக் மேடின்சன் பெங்களூர் அணி சார்பில் தன் முதலாலது ஐ.பி.எல் போட்டியில் விளையாடினார்.

இதேவேளை, போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த யுவராஜ் சிங் இருபதுக்கு-20 உலகக் கிண்ண போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக அடைந்த தோல்வி இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில் இதுபோன்ற ஏமாற்றங்களில் இருந்து மீண்டு வர விரும்புகிறேன். என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்