அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2014 | 9:26 am

தாதியர்களுக்கு பிரசவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றமையை ஆட்சேபித்து 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த தமது பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதற்கு அரச குடும்பநல சுகாதார ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு குறிப்பிடுகின்றார்.

ஆயினும், இன்று நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போது பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கங்கள் தொடர்பிலான மேலதிக தகவல்களை தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களின் பணிபகிஷ்கரிப்பு காரணமாக மகப்பேற்று சிகிச்சை நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.

பிள்ளைகளுக்கான நோய் எதிர்ப்பு ஊசியேற்றல் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்பக்கட்ட சுகாதார சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்