விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை – இராணுவ ஊடகப் பேச்சாளர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை – இராணுவ ஊடகப் பேச்சாளர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை – இராணுவ ஊடகப் பேச்சாளர்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 12:36 pm

இராணுவத்தினரால் தேடப்பட்டுவந்த கோபி உள்ளிட்ட மூன்று விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கின்றார்.

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக படை தரப்பு​தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர்களை கைது செய்ய, பொதுமக்களின் உதவியை நாடுவதாக பாதுகாப்பு தரப்பினர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மூவரும் நெடுங்கேணி பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்து, பாதுகாப்பு தரப்பினர் அந்த பகுதியை சுற்றி வளைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது தப்பி செல்ல முற்பட்ட மூவரும், பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்