பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் – அபு அஸ்மி

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் – அபு அஸ்மி

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் – அபு அஸ்மி

எழுத்தாளர் Bella Dalima

11 Apr, 2014 | 4:05 pm

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என இந்தியாவின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு அஸ்மி தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், பலாத்கார வழக்குகளில் ஆண்களுக்கு மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அபு அஸ்மி இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங்கின் கருத்துத் தொடர்பில் அஸ்மியிடம் ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முலாயம்சிங் யாதவ், “பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெண் தன்னை பலாத்காரம் செய்துவிட்டனர் என்று முறைப்பாடு செய்தால், உடனே மூன்று ஏழைப் பையன்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. பலாத்கார சம்பவங்களுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? அவர்கள் பையன்கள்.. தவறு செய்வார்கள். இத்தகைய சட்டங்களை நிச்சயம் மாற்ற முயலுவோம். பொய்யான பலாத்கார புகார் தெரிவிப்போருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம்,” என்று தெரிவித்தார்.

அபு அஸ்மி ஊடகவியலாளர்களிடம் இதுபற்றித் தெரிவிக்கையில், “பெண்களில் தவறு இருந்தாலும் இங்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். திருமணம் முடித்த பெண்ணோ முடிக்காதவரோ, சம்மதத்துடனோ சம்மதமின்றியோ பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால், இருவரையுமே தூக்கிலிட வேண்டும்,” என தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை வடக்கில் தேர்தலில் போட்டியிடும் அபு அஸ்மியின் மகன், பர்ஹான் அஸ்மி, அவரது தந்தை மற்றும் கட்சித் தலைவரின் கருத்துடன் தான் உடன்படவில்லை என தெரிவித்துள்ளார்.

“பாலியல் வல்லுறவில் ஈடுபடும் ஆண்களை 100 தடவைகள் தூக்கிலிட வேண்டும். எனக்கு 5 சகோதரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னைப் போன்றே நினைக்கின்றனர், என பர்ஹான் அஸ்மி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்