பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 8:58 am

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்வோரின் வசதிகருதி விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொழும்பு கோட்டையில் இருந்து காலி, மாத்தறை, கண்டி, பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

இதுதவிர தூர சேவையில் ஈடுபடுகின்ற ரயில்களுடன் மேலதிக பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் பண்டிகைக்காலத்தில் பயணிகளின் தேவைகளை கருத்திற்கொண்டு தேவை ஏற்படின் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்