பண்டிகைக் கால பாதுகாப்பு கருதி 35,000 பொலிஸார் கடமையில்

பண்டிகைக் கால பாதுகாப்பு கருதி 35,000 பொலிஸார் கடமையில்

பண்டிகைக் கால பாதுகாப்பு கருதி 35,000 பொலிஸார் கடமையில்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 9:55 am

பண்டிகைக் காலத்தில் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்காக நகரங்களுக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பு கருதி 35,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அதிகளவில் பணப் பரிமாற்றம் இடம்பெறுகின்ற அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்