அலரி விதையை தவறுதலாக உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு

அலரி விதையை தவறுதலாக உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு

அலரி விதையை தவறுதலாக உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 6:37 pm

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் அலரி விதையை உட்கொண்ட சிறுவனொருவன் இன்று காலை உயிரிழந்துள்ளான்.

அலரி விதையை தவறுதலாக உட்கொண்ட நிலையில், நேற்று மாலை தம்பலகாமம் கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆயினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிறுவன் இன்று காலை உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்