ஜெனரல் ரஷட் மொஹமட் யாழ். விஜயம்

ஜெனரல் ரஷட் மொஹமட் யாழ். விஜயம்

ஜெனரல் ரஷட் மொஹமட் யாழ். விஜயம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 9:17 am

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ரஷட் மொஹமட் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, யாழ் கட்டளைத் தளபதி உட்பட இராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் யாழ்பாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் அவர் கேட்டறிந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் யாழ் கோட்டைக்கும் ஜெனரல் ரஷட் மொஹமட் விஜயம் செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்