சின்னையா தவராசா வட மாகாண சபை உறுப்பினராக நியமனம்

சின்னையா தவராசா வட மாகாண சபை உறுப்பினராக நியமனம்

சின்னையா தவராசா வட மாகாண சபை உறுப்பினராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 2:04 pm

வட மாகாண சபையின் உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னையா தவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக இருந்த கந்தசாமி கமலேந்திரனின் இடத்திற்கே தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியேல் ரெக்சியனின் கொலை சம்பவத்தின் சந்தேகநபரான கந்தசாமி கமலேந்திரன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்.

வட மாகாண சபையின் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்தும் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து வட மாகாண சபையின் எதிர்கட்சி தரப்பில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு சின்னையா தவராசா நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணையாளரால் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்