கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 5:41 pm

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனைசெய்த 250 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவிக்கின்றது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர், வர்த்தக சந்தையில் அரிசியின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கு சில்லறை விலை 77 ரூபாவாகவும், வெள்ளை நாட்டரிசிக்கு 68 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி என்பவற்றுக்கு 66 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்