குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சிலர் மாத்தறையில் எதிர்ப்பு நடவடிக்கை

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சிலர் மாத்தறையில் எதிர்ப்பு நடவடிக்கை

குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சிலர் மாத்தறையில் எதிர்ப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 12:31 pm

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சிலர் மாத்தறை நகரில் இன்று முற்பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தறை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் திரண்ட குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், தமது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் தாதியர்களுக்கு பிரசவ பயிற்சி வழங்குவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் தங்களின் பொருளாதார நன்மைகளுக்காகவும், வெளிநாடு செல்வதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் தாதியர்கள் பிரசவ பயிற்சிகளை பெற்றுக்கொள்ள எத்தனிப்பதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குடும்பநல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்